பேஸ்புக் காதலால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி…!

0

காலியிலிருந்து நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றுக்கு 13 வயது சிறுமியை அழைத்துச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேகநபரான இளைஞனை காவல்துறையினர் தேடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக குறித்த சந்தேகநபருடன் இந்த சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சிறுமி கடந்த வாரம் அதிகாலையில் வீட்டிலிருந்து காலி பேருந்து தரிப்பிடத்துக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளதுடன், அங்கு சந்தேகநபரான இளைஞனை சந்தித்துள்ளார்.

பின்னர் இவர்கள் இருவரும் பேருந்தின் ஊடாக நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்று சென்றுள்ளனர்.

அங்குவைத்து சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் சிறுமியை கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here