பேருந்து மோதி கோர விபத்து….. 18 பேர் பலி!

0

இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் கனரக வாகனமொன்று பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் உறங்கிக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளனர்.

நள்ளிரவு வேளையில் அப்பேருந்தில் பழுதடைந்ததால் அதனை வீதியோரமாக நிறுத்திவிட்டு பேருந்தின் முன்பக்கத்தில் வீதியோரமாக குறித்த தொழிலாளர்கள் உறங்கியுள்ளனர்.

அதிகாலை 1.30 மணியளவில் அவ்வீதியால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கனரக வாகனமொன்று பேருந்தை மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்துக்கு முன்பாக உறங்கி கொண்டிருந்த 18 பேர் மீது வாகனங்கள் ஏறிச்சென்றதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கனரக வாகனத்தின் சாரதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here