பேருந்துகளில் கொழும்பு பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

கொழும்பில் இருந்து தூர பயணங்கள் செல்லும் பேருந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கொழும்பில் இருந்து பயணிக்கும் பேருந்துகளில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகன விபத்துக்களில் நேற்றைய தினம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகமாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் அதிகமாக வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறும் காலப்பகுதிகளாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here