பேராதனை பல்கலைக்கழகத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு பகடிவதை!

0

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்துடன் இணைந்த 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய ஒரு குழு, இடைநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சக மாணவர்களை பகடிவதை செய்ததற்காக அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட மாணவர்களினால் இந்த பகடிவதை நிகழ்ந்துள்ளது. இதனால் பல்கலைக்கழகத்திற்குள் வைரஸ் பரவியதும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் கொவிட் அறிகுறிகளுடன் புதிதாக வந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டாம்
என்றும் வளாகத்தில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக வைரஸ் முழு தொகுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடையே பரவியது என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் ஈடுபடாத மாணவர்கள் உட்பட முழு தொகுதி மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here