பேமிலி மேன் சீரிஸ் தமிழர்களுக்கு எதிரானதா? ராஜ் & டி கே பதில்!

0

பேமிலி மேன் சீரிஸ் தமிழர்களுக்கு எதிரானது என்று சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அதற்கு அந்த சீரிஸின் தயாரிப்பாளர்கள் பதிலளித்துள்ளனர்.

அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த தொடர் தீவிரவாதம் மற்றும் ரா புலனாய்வை மையமாக கொண்டது. இந்த தொடரின் முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த தொடர் பரவலான கவனத்தை இந்தியா முழுவதும் பெற்றது. அதனால் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. சீசன் 2

டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இதில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது போலவும் அதை புலனாய்வு செய்ய மனோஜ் பாஜ்பாய் வருவது போலவும் காட்டப்படுகின்றன. மேலும் சமந்தா இதில் பெண் தீவிரவாதியாக(விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்திருக்கிறார்) சித்தரிக்கப்படுவதும், அவர் இலங்கை தமிழில் பேசுவதும் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட சீரிஸின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே இருவரும் முன்னணி ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில் டிரைலரில் சில காட்சிகளை பார்த்துவிட்டு பலரும் யூகங்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த இந்தியா முழுவதுக்குமான தொடராக இதை நாங்கள் விரும்பி எடுத்திருக்கிறோம். நாங்கள் தமிழ் மக்களின் செண்டிமெண்ட் மற்றும் கலாச்சாரம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு தான் இதை எடுத்தோம். அவர்கள் மேல் எங்களுக்கு அன்பு மற்றும் மரியாதை உள்ளது’ எனக் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here