அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் டுக்சன் என்ற பகுதியில் வசித்த வந்த சிறுமி ஒருவர். தனக்கு தலையை அரிக்கிறது என்று அடிக்கடி புகார் கொடுத்துள்ளார்.
இவரின் தாயார் பெயர் சான்ட்ரா, பாட்டி பெயர் எலிசபெத். அந்த சிறுமிக்கு பிறந்ததில் இருந்து ரத்த சோகை பிரச்சனையால் கடுமையாக அவதிக்கப்பட்டு இருக்கிறார்.
சிறுமிக்கு 9 வயது ஆன நிலையில் ரத்த சோகை மோசமான நிலையை அடைந்து உள்ளது.
ஆனால் சிறுமிக்கு சிகிச்சை பார்க்க பாட்டி, அம்மா இருவரும் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த இரண்டு வருடமாக அந்த சிறுமிக்கு பேன் தொல்லை ஏற்பட்டு தலை முழுக்க பேன் நிரம்பி உள்ளது.
இதில் தலையில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு, அதில் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் முகத்திலும் அந்த தொற்றுகள் பரவி, முகம் முழுக்க பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அந்த சிறுமியின் தாயார் சான்ட்ரா, சிறுமியை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை.
மாறாக இவர் தனது பாய் பிரண்ட்டுடன் வேறு வீட்டில் வசித்து வந்து இருக்கிறார்.
சிறுமியின் பாட்டி எலிசபெத்தும், சிறுமி உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தும், எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இரண்டு பேரும் சிறுமியின் உடல் நிலை மோசமாகிறது என்று தெரிந்தும் சிறுமியை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை.
மேலும் அவர் ரத்த வாந்தி எடுத்து வயிற்று போக்கால் அவதிப்பட்டு இருக்கிறார்.
அதன்பின்னர் உடல்நிலை மோசமான நிலையில் வீட்டிலேயே அவர் பலியாகிவிட்டார்.
இந்நிலையில் உடனே பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு தாய் மற்றும் மீது முதல் டிகிரி கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
