இலங்கையில் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

கோதுமை மாவின் விலையும் அதிகரிக்காது, அதனூடாக பேக்கரி பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்காது இருப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் இடையில், நேற்று (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு இணக்கம் காணப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகையால், பாண் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மாஜரின் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையால், சாதாரண விலைக்கு பேக்கரி உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here