பெல்ஜியத்தில் கோர விபத்து..! 4 பேர் பலி

0

பெல்ஜிய தலைநகர் ப்ரஸ்ஸஸ்(brussels) இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரான ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிஸ்-ல் ( Strépy-Bracquegnies) திருவிழா அணிவகுப்பிற்காக தயாராகி கொண்டிருந்தது.

பொதுமக்கள் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடிரென கார் ஒன்று நுழைந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கார் விபத்தில் இதுவரை 4 நபர்கள் வரை பலியாகியுள்ளனர்.

12 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளிவரவில்லை.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய அந்த கார் மற்றும் அதன் ஓட்டுநரை பொலிசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here