பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் தொடருந்துக்காக காத்திருந்த பெண்ணொருவரை மர்ம நபர் தண்டவாளத்தில் தள்ளி விட்டுள்ளார்.
இக் காணொளியானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
மெட்ரோ தொடருந்து நிலையத்தில் நடைமேடையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணை, பின்னாலிருந்து வரும் மர்ம நபர் ஒருவர் தண்டவாளத்தை நோக்கி தள்ளிவிடும் காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
அந்நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ தொடருந்து, அப்பெண்ணுக்கு மிகவும் அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பெண்ணின் நிலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
அந்தப் பெண்ணை தள்ளிவிட்டு தப்பிச் சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.