பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தாய்…

0

நியூஸிலந்தில் பெட்டிகளில் இரு பிள்ளைகளுடைய உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தென்கொரியாவில் பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அவர் நியூஸிலந்துக் குடியுரிமை வைத்திருக்கும் கொரியர் என தெரியவந்துள்ளது.

அவர் தென்கொரியாவின் உல்சான் நகரில் கைதுசெய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் நியூஸிலந்தின் ஆக்லந்து நகரில் தனது 7 வயது, 10 வயதுப் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு 2018 ஆம் ஆண்டு தென்கொரியாவிற்குத் தப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரை நியூஸிலந்திடம் ஒப்படைக்கலாமா என்பது குறித்து தென்கொரிய நீதிமன்றம் ஆய்வு செய்துள்ளது.

சென்ற மாதம் ஆக்லந்தில் ஏலத்தில் வாங்கப்பட்ட பெட்டிகளில் இரு பிள்ளைகளின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்போது அந்தப் பெட்டிகளை வாங்கிய குடும்பத்திற்கும் அந்தப் பிள்ளைகளின் மரணத்திற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here