பெற்ற தாயை வன்கொடுமை செய்த 16 வயது மகன் கைது….!

0

ஸ்பெயினின் கிரான் கனேரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸில் செவ்வாய்கிழமை 16 வயது சிறுவன் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே துஷ்பிரயோகம் செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது மகனின் செயல் குறித்து பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சிறுவனை கைது செய்தனர்.

ஒரு சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி மெர்சிடிஸ் மார்டினெஸ் சான்செஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தான் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததாக கூறினார்.

தனது தாயின் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து எதுவும் தெரியாது என்றும் தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் கூறியுள்ளான்.

வழக்கறிஞர் ஜோஸ் அன்டோனியோ பிளாங்கோ, சிறுவனை டெனெர்ஃப்பில் உள்ள சிறைச்சாலைக்கு அனுப்புமாறு கேட்டார்.

வழக்கு குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சிறுவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால் அவரது அடையாளத்தை காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here