பெற்ற தாயை கொடூமாக கொன்ற மகள்…! காரணம் என்ன..?

0

இந்தியாவில் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி.

இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார் முனியலட்சுமி.

இவரது 17 வயது மகள் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு தங்ககுமார், கண்ணன் ஆகியோர் நண்பர்களானார்கள், இவர்களுடன் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இதனை முனியலட்சுமி கண்டிக்க ஆத்திரமடைந்த மகள், சனி்க்கிழமை இரவு ஆண் நண்பர்களின் உதவியுடன் முனியலட்சுமி துடிதுடிக்க கொன்றுள்ளார்.

பலரும் நகைக்காக முனியலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதினர்.

இந்நிலையில், பொலிஸ் விசாரணையின் போது முனியலட்சுமியின் மகள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதையடுத்து மகள் மற்றும் முனியலட்சுமியைக் கொலை செய்ய உதவியதாக அவரது நண்பர் கண்ணனை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here