பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு…!

0

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தங்களது குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் குழந்தைக்கு காய்ச்சல், இருமல், சளி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளின் கைகளை நன்றாக கழுவவும், வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய கற்றுக்கொடுக்குமாறும் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here