இந்தியாவில் கேரளாவின் கொச்சியை சேர்ந்த கிரிஜா 62 வயது அவர் மகள் ரஜிதா 38 வயது மற்றும் ரஜிதாவின் கணவர் பிரசாந்த் 43 வயது ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பிரசாந்த் – ரஜிதா தம்பதிக்கு 12 வயதில் மகளும் 7 வயதில் மகனும் உள்ள நிலையில் மகள் தான் இந்த தற்கொலை குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் சடலத்தை மீட்டதோடு பிரசாந்த் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், ரூ 1 கோடிக்கு மேல் கடன் உள்ள காணதால் இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டோம் என எழுதப்பட்டுள்ளது.
அதன்படி ரஜிதா விஷம் குடித்தும், பிரசாந்த் மற்றும் கிரிஜா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கண்களும் பீதியில் இருந்ததை காணமுடிந்தது.
ஏனெனில் அவர்களை தற்கொலை செய்ய பெற்றோர் வற்புறுத்திய நிலையில் இருவரும் மறுத்துள்ளனர்.
இதையடுத்து குழந்தைகள் கண்முன்னே அவர்கள் உயிரை மாய்த்து கொண்டனர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சனை தான் காரணம் எனவும், வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
