பெர்லின் நகரில் பாரிய வெடிவிபத்தில் உருவாகிய காட்டுத்தீ

0

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள Grunewald என்ற இடத்தில் புகழ்பெற்ற வனப்பகுதி ஒன்று அமைந்துள்ளது.

அந்த வனப்பகுதியில், ஓரிடத்தில் வெடிபொருட்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை அந்த இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

அதனை தொடர்ந்து அந்த வனப்பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடிக்க, காட்டுத்தீ உருவாகியுள்ளது.

140க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் அந்த இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால், அந்த இடத்தில் வெடிப்பொருட்கள் இருப்பதால், இடையிடையே அவை வெடிப்பது தீயை அணைப்பதற்குத் தடையாக உள்ளது.

இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

அப்பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் அந்த வனப்பகுதிக்குச் செல்லவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here