பெருவில் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து..! பயணிகளுக்கு நேர்ந்த கதி

0

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இதையொட்டி தலைநகர் லிமாவில் வசித்து வரும் பரோபாம்பா மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் பேருந்தை வாடகைக்கு அமர்த்தி தங்கள் மாகாணத்துக்கு சென்று ஓட்டு போட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அதே பேருந்தில் பரோபாம்பா மாகாணத்தில் இருந்து லிமா நகருக்கு புறப்பட்டனர்.

இந்த பஸ் பரோபாம்பா மாகாணத்தில் உள்ள அன்காஷ் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய பேருந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது‌.

இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும் குறித்த பேருந்து விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்க்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here