பெண் மருத்துவரை கொலை செய்த காதலனின் விபரீத முடிவு

0

இந்திய கேரள மாநிலம் குத்தாட்டு குளம் அருகே பாலக்குழா பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் சோனா திருச்சூர் பகுதியில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

ஏற்கனவே திருமணமான இவர் கணவரை பிரிந்து மகேஷ் (41) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் 2 வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மகேஷுடனும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் திகதி மருத்துவமனியில் இருந்தபோது அவரை மகேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கு கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகேஷை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் உச்ச நீதிமன்றம் மகேஷின் ஜாமீனை ரத்து செய்தது.

இதனால் தலைமறைவாக இருந்து வந்த மகேஷ் திருச்சூர் மாவட்டம் சோற்றானிக்கரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.

நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இது தொடர்பில் விடுதி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சோற்றானிக்கரா பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர் பின் பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here