பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 8 வயது சிறுவன்…!

0

அமெரிக்காவின் புளோரிடாவில் 8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதில் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

ரோடரிக் ராண்டால் (Roderick Randall) தனது மகன், பெண் தோழி, பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

ராண்டால் வெளியே சென்ற போது அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்த அவரது மகன் விளையாட்டாக சுட்டுள்ளான்.

அவரது பெண் தோழியின் ஒரு வயது பெண் குழந்தையின் உடலை துளைத்து வெளியே வந்த குண்டு மற்றொரு குழந்தையின் மீதும் பாய்ந்துள்ளது.

இதில் அந்த ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.

துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிய ராண்டலை, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, கவனக்குறைவாக செயல்பட்டது போன்ற காரணங்களால் பொலிசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here