பெண் ஒருவர் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கும் நாடு…!

0

தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நாட்டில் ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.

இது போன்று திருமண விவகாரத்தில், பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அங்கு நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கப்படுவதால் ஒரு பெண், பல ஆண்களை மணக்க அனுமதிக்க வேண்டும் என, பாலின உரிமை ஆர்வலர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து திருமண சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, இதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்தது.

அதன் படி இந்த சட்டம் குறித்து, பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த சட்டம் குறித்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு இது ஆப்பிரிக்க கலாசாரத்தை அழித்துவிடும். பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.

ஆணின் இடத்தை பெண்ணுக்கு வழங்க முடியாது என பலரும் கருத்து கூறிவருவதால், இதை சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அரசிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here