பெண்ணின் வயிற்றில் சிசுவின் தலையை வைத்து தைத்த கொடூரம்!

0

பாகிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிந்து மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த 32 வயது பெண் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மகப்பேறு மருத்துவர் இல்லாததால், ஊழியர்கள் சிலர் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர்.

சுகாதார ஊழியர்களின் அலட்சியத்தினால் குழந்தையின் தலை துண்டாகியுள்ளது.

பின்னர் சுகாதார ஊழியர்கள் தலையை தாயின் வயிற்றிலேயே வைத்து தைத்துள்ளனர்.

குறித்த பெண்ணை உடனடியாக மிதியில் உள்ள மருத்துவமனையின் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

ஆனால் தலை உள்ளே சிக்கிக்கொண்டதால், தாயின் கருப்பை உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலை வெளியே எடுக்கப்பட்டது.

தற்போது அப்பெண் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியத்தைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தின் சுகாதாரத் துறை இயக்குனர் ஜூமான் பஹோடோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here