பெண்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை

0

இலங்கையில் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.

இது தொடர்பில் பெண்கள் அவதானமாக இருக்குமாறும் இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி நேற்றைய தினம் மூன்று தங்கச் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற போர்வையிலும் தங்கச் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக யாருமற்ற இடங்களில் பயணிக்கும் போது பெண்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here