பெண்களை சரமாரியாக தாக்கும் மர்ம கும்பல்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

0

இந்தியாவில் டெல்லி நகரில் அடையாளம் தெரியாத நபர்கள், பெண்களின் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவமானது சிசிடிவி கெமெராவில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த காணொளிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 19 ஆம் திகதி டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் என்ற பகுதியில் நள்ளிரவில் காரில் இருந்து இறங்கிய பெண்களில் ஒருவரை சூழ்ந்துக்கொண்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மர்மநபர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி பொலிஸார், ஷாலிமார் பாக் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களின் காட்சிகளின் அடிப்படையில் பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆகவே பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here