பெண்களின் ஆரோக்கியம்: 20 வயது முதல் 70 வயது வரை

0

உங்கள் உடல்நலன் குறித்து நெருக்கமானவர்களிடம் பகிருங்கள். எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசவுகரியம் நேர்ந்தால் தொய்வின்றி சிகிச்சையை தொடர்வதற்கு அது உதவும்.

20 வயதில் :

 • சரும பாரமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கும் வயது இது.
 • அழகு சாதன பொருட்கள் உடலுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 • உடலில் சன்ஸ்கிரீன் பூசுவது அவசியமானது. அது சரும அழகை காப்பதோடு தோல் புற்றுநோயில் இருந்து தற்காத்துகொள்ளவும் உதவும்.

30 வயதில் :

 • எலும்பு ஆரோக்கியம் மீது கவனம் செலுத்த வேண்டிய வயது இது.
 • கால்சியம் அதிக அளவு உட்கொள்வதும், உடற்பயிற்சி மீது கவனம் செலுத்துவதும் அவசியமானது.
 • 30 வயது வரைக்கும் தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பிறகு வலுவை இழக்க தொடங்கி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 • எலும்புகளை போலவே மூளை செல்களில் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

40 வயதில் :

உணவுபழக்கம்

 • சர்க்கரையை தவிர்க்க தொடங்க வேண்டியகாலகட்டம் இது.
 • காபி, ஜூஸ், பலகாரங்களில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்து கொள்ளுங்கள்.
 • ஆரஞ்சு ஜூஸில் அறவே சர்க்கரையை தவிர்த்து விடுங்கள்.
 • மூன்று வேளை உணவிலும் கூடுமானவரை பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்.
 • உடல் எடையை குறைப்பதற்கு பட்டினியாக இருக்க வேண்டியதில்லை.

உடற்பயிற்சி

 • 40 வயதில் வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியமானது.
 • உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
 • நடைப்பயிற்சி, ஜூம்பா, ஜாக்கிங் இவற்றுள் ஏதாவதொரு பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

50 வயதில் :

 • உடலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற தொடங்கும் காலகட்டம் இது. நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது.
 • உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
 • 30, 40 வயதுகளில் பின்பற்றிய நல்ல பழக்கவழக்கங்கள் தான் உங்களின் தகுதியை உயர்த்தும். அவற்றை அப்படியே தொடருங்கள்
 • உங்களுக்கு நீங்களே ஆலோசகராக மாறிவிடுங்கள். அதே வேளையில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் தொழில் ரீதியாக ஆலோசனையோ, உதவியோ கேட்பதற்கு தயங்காதீர்கள்.
 • இந்த வயதில் தனிமைக்கு இடம் கொடுக்காதீர்கள். நான் தனிமையில் இல்லை என்பதை உறுதிபடுத்திகொண்டே இருங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள்.

60 வயதில் :

 • உங்கள் வாழ்க்கையின் அடுத்த 20 ஆண்டுகள் அமைய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்க தயாராகுங்கள்.
 • உங்கள் செயல்பாடுகள் மெதுவாக இருந்தாலும் அதில் சுறுசுறுப்புக்கு குறை இருக்கக்கூடாது. அத்தகைய வாழ்க்கை முறைக்கு திரும்புங்கள். அதுவே உடலையும், மனதையும் புத்துணர்வுடன் செயல் பட வைக்கும். ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படியுங்கள்.

70 வயதில் :

 • நீங்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய வயது இது.
 • இந்த வயதில் எலும்புகள் பலவீனமடைந்த நிலையில் இருக்கும். லேசாக ஏற்படும் காயம் கூட எலும்பு முறிவு பிரச்சனைக்கு வழிவகுத்து விடும். அதனால் நிதானமாக செயல் பட வேண்டும்.

பொதுவான டிப்ஸ் :

 • வருடம் ஒருமுறையாவது உடல் பரிசோதனை மேற்கொள்வது சிறப்பானது.
 • உங்கள் உடல்நலன் குறித்து நெருக்கமானவர்களிடம் பகிருங்கள். எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசவுகரியம் நேர்ந்தால் தொய்வின்றி சிகிச்சையை தொடர்வதற்கு அது உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here