பூஸ்டர் தடுப்பூசி பெறுபவர்கள் தொடர்பில் உலக சுகாதாரத்துறை விளக்கம்!

0

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகின்றது.

முதல் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்த Omicron தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் சில நாடுகள் வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஆனாலும் புதிய வகை Omicron தொற்று வெகு விரைவாக பரவுவது குறித்து உலக சுகாதாரத்துறை கவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இறப்பவர்கள் கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

பூஸ்டர் வழங்குவதன் அவசியத்தை மீளாய்வு செய்யும் நோக்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே உலக சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 தடுப்பூசி குறைந்தது ஆறு மாதம் வரை சிறப்பாக செயற்படும் என்றும் அதன் பின்னர் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பூஸ்டர் செலுத்தப்படுவது சிறந்ததது என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சினபார்ம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here