கொரோனாவை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனானது நான்கு மாதங்களில் குறைந்து விடுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது.
கொரோனாவானது டெல்டா, ஒமைக்ரான், ஏபி2 என உருமாறி மக்களிடத்தில் பரவி வருகின்றது.
இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதிற்காக உலக நாடுகள் முதல் தவணை இரண்டாம் தவணை என தங்கள் நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தின.
இரண்டு தவணை தடுப்பூசி பெரும்பாலானோர் செலுத்திக்கொண்டு பின்னரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் பூஸ்டர் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியின் செயல் திறன் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில்,
ஒருவருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்காவது மாதத்தில் அதன் செயல் திறன் கணிசமாக குறைந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டாவது மாதத்தில் அதன் செயல் திறன் 87 சதவீதமாகவும், நான்காவது மாதத்தில் 66 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவந்துள்ளது.