பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் எச்.ஐ.வி ஏற்படும் அபாயம்…?

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய்க்கு வழி வகுக்கும் என்று கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார்.

அவர் கூறியதாக சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றது.

அதில் உங்களில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ் தடுப்பூசி) போட்டுக்கொண்டவர்கள், எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உபசனா ரே (விஞ்ஞானி, கொல்கத்தா சி.எஸ்.ஐ.ஆர். இந்திய ரசாயன உயிரியல் கழகம்) ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, எதற்காக எச்.ஐ.வி. சோதனைக்கு வழிவகுக்கும் என்று எனக்கு தெரியவில்லை.

வினீதா பால் (புனே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி கழகம்) கொரோனா தடுப்பூசிகள் எந்த விதத்திலும் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பை ஏற்படுத்தாது.

மாண்டாக்னியர் அப்படி சொல்லி இருக்கிறாரா என்பதற்கு ஆதாரம் இல்லை.

தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு தடுப்பை உண்டுபண்ணுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்கிற தனி நபர்கள் பாசிட்டிவ் ஆகலாம்.

இது தடுப்பூசி பூஸ்டர் டோசால் நேர்ந்ததை விட தற்செயலாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here