பூனைக்கு தாய்ப்பால் கொடுக்கும் விசித்திர பெண்…!

0

அமெரிக்காவில், நியூயார்க்கின் சைராகுஸிலிருந்து ஜார்ஜியாவின் அட்லாண்டாவிற்கு சென்றுகொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

அந்த விமானத்தில், 13A இருக்கையில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், உடம்பில் ரோமங்களே இல்லாத ஒரு தனது வளர்ப்பு பூனையை, ஒரு துணியில் சுற்றி குழந்தையை வைத்திருப்பது போல் மடியில் வைத்து, தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இந்தக் கட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அப்பெண்ணின் செயல் அருவருப்பாக இருப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் விமான பணியாளர்களிடம் புகார் அளித்தனர்.

அதனையடுத்து விமான பணியாளர்கள் இச்செயலை நிறுத்த வேண்டும் என்றும் பூனையை மீண்டும் கேரியரில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அவ்வாறு செய்ய மறுத்த அப்பெண், தொடர்ந்து பூனைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தார்.

பின்னர், விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர், டெல்டா விமானத்தின் ‘Red Coat’ குழுவினர் இந்த சம்பவத்தை விசாரணை செய்தனர்.

இந்த வினோதமான சம்பவம் குறித்து, விமானப் பணிப்பெண் ஐன்ஸ்லி எலிசபெத் தனது TikTok பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here