பூநகரியில் உருக்குலைந்த நிலையில் மிதந்த சடலம்; விசாரணைகள் தீவிரம்

0

பூநகரி சங்குப்பிட்டி கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டது.

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் நேற்றைய தினம்(27) கைகள், கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்டு வலையினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டது.

குறித்த சடலம் அடையாளம் காண முடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலீஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here