பூங்காவில் தனியாக இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி…

0

கனடாவில் North Vancouverல் உள்ள Trillium பூங்காவில் உள்ள பாலத்தில் 18 வயதுக்கு குறைவான டீன் ஏஜ் பெண்ணிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 11 ஆம் திகதி நடந்துள்ளது.

இது தொடர்பான முழு தகவல்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் 18 வயதுக்கு குறைவான டீன் ஏஜ் பெண்ணொருவர் அங்கு வந்த நிலையில் அவரை ஆண் ஒருவர் அணுகியுள்ளார்.

பின்னர் அப்பெண்ணை பிடித்து இழுத்துள்ளார்.

ஆனால் அவரை எதிர்த்து அப்பெண் போராடிய நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பியிருக்கிறான்.

குறித்த நபர் வயது 40 ஆக இருக்கும் எனவும் அவர் ஒல்லியான உடல்வாகு உடையவராக காணப்பட்டுள்ளார்.

மேலும் சிறிய நாய் ஒன்று அவனுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்தோ அல்லது குற்றவாளி குறித்தோ தகவலை பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here