புளியமரத்தில் தொங்கி விளையாடும் முன்னணி நடிகர்!

0

“பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தற்போது தமிழின் முன்னணி நடிகராக அறியப்படுகிறார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான “கைதி“ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி புளியமரத்தில் தொங்கி விளையாடுவது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் “சிறிய வயதில் ஏறமுயன்ற புளியமரம். இறுதியாக நான் அதைச் செய்து விட்டேன்” எனப் பெருமிதத்தோடு தெரிவித்து இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படியொரு ஆசையா? என கமெண்ட் பதிவிட்டு உள்ளனர்.

அதோடு இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்த “சுல்தான்“ திரைப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் பிரபுதேவா இயக்கத்தில் “கருப்புராஜா வெள்ளைராஜா, படத்திலும் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் “பார்ட்டி“ போன்ற திரைப்படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவன் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புளியமரத்தில் தொங்கியபடி எடுக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களது சிறுவயது அனுபவத்தையும் கிளறி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here