புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடிய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்…!

0

கனடாவில் 2021 ஆம் ஆண்டில், 40,000 புலம்பெயர்ந்தோர் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை நாட்டிற்கு வருவிப்பதற்கு ஸ்பான்சர் செய்ய கனடிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் திட்டத்தின் படி, (Parents and Grandparents Programme (PGP), ஆண்டு தோறும் 10,000 பேர் தங்கள் பெற்றோரை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், தற்போது முதன் முறையாக 30,000 கூடுதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

கனடாவைப் பொருத்தவரை, இந்திய கனேடியர்கள் சமூகத்தினர் அதிகரித்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அவர்கள்தான் அதிக அளவில் பயன்பெறப்போகிறார்கள்.

அத்துடன் இந்த திட்டத்துக்காக, செப்டம்பர் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்ந்தெடுக்கப்படுவோர், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவர அனுமதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here