புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்

0

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவரின் நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்களை உலுக்கியது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று (பிப்ரவரி 04) பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை வருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here