புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

புத்தாண்டு விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முகக்கவசங்களை அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது உள்ளிட்ட பணியிடங்களிலும் பொது இடங்களிலும் முறையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கடந்த வாரத்தில் மக்கள் கூடிவந்த இடங்களில், சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடந்துகொள்வதை தாம் அவதானித்ததாகவும் எனினும் சிலர் அதைப் பின்பற்றுவதில்லை எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஒருவரிடமிருந்து நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு பரவியதாக அவர் குறிப்பிட்டார்.

புத்தாண்டின்போது, ​​தாங்கள் பல கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் எனினும் சில தடைகள் விதிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

ஏனெனில் சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டு சுதந்திரத்தை அனுபவிக்க முயன்றனர் என்றும் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here