புத்தளம் நகர சபை தலைவர் உயிரிழப்பு – மூவர் கைது..!

0

புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாயிஸ் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்துல் பாயிஸின் சாரதி உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் இருந்துள்ளமை, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாயிஸ், திடீர் விபத்தொன்றில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையிலேயே, அவரது சாரதி உள்ளிட்ட மூவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here