புத்தளத்தில் வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவர் கொலை!

0

இலங்கையில் புத்தளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மணதீவு – செவ்வன்தீவு பகுதியில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறித்த வாக்குவாதம் மோதலாக மாறி சந்தேகநபர் மற்றைய நபரைக் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 3ஆம் தூண் – புத்தளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here