புதிய Omicron துணை வைரஸ் தொடர்பில் சில தகவல்கள்

0

BA.2 sub-lineage of Omicron என்று அழைக்கப்படும் இந்த Omicron துணை வைரஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த Omicron துணை மாறுபாடு வைரஸ், Omicron வைரஸை விட வேகமாக பரவக்கூடியது என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சியாகிய UKHSA தெரிவித்துள்ளது.

அது Omicron வைரஸைவிட, அதிக தொற்றும் தன்மையுடையதாக இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த துணை Omicron வைரஸ், பிசிஆர் சோதனையில் அதைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.

இரகசியமாக செயல்படும் வைரஸ் என்று பொருள்படும் வகையில், ‘Stealth’ Omicron என்றும் அழைக்கப்படுகிறது.

இதனால், ஒருவருக்கு இந்த கொரோனா தொற்று இருந்தும், பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

நோயின் தீவிரத்தன்மையும் மருத்துவமனை அனுமதியும் தொடர்ந்து இந்த BA.2 Omicron துணை மாறுபாடு வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அது Omicron வைரஸை விட தீவிர நோய்த்தொற்றை உருவாக்குவதாகத் தோன்றவில்லை.

அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் இல்லை என டென்மார்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here