புதிய விதி முறைகளுடன் 2021 ஐபிஎல் தொடர்….!

0

அடுத்த மாதம் 9ஆம் திகதி 2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

இதில் சில புதிய விதிகள் பின்பற்றப்படவுள்ளது.

அதன்படி தொலைக்காட்சி நடுவர் பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் சாப்ட் சிக்னல் விதிமுறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொலைக்காட்சி நடுவர் சொல்வதே இறுதி முடிவாகும்.

மேலும் கள நடுவர்கள் எடுக்கின்ற ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளிலும் மூன்றாவது நடுவர்கள் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதோடு இரண்டு இன்னிங்ஸின் இறுதி ஓவரான இருபதாவது ஓவர் ஆட்டத்தின் 90 நிமிடங்களுக்குள் வீசியாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 90வது நிமிடத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருபதாவது ஓவர் வீசினால் போதும் என இருந்தது.

போட்டியின் நேரத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here