ஸ்ரீலங்கன் விமான சேவை மாலைத்தீவின் கன் தீவுக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL119 என்ற விமானம் கன் தீவுக்கு பயணங்களை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஒவ்வொரு சனிக்கிமையும் காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கன் தீவு நோக்கி பயணிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அன்றைய தினமே மாலை 13.04 மணியளவில் கன் தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீண்டும் விமானம் பயணிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.