புதிய தோற்றத்தில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

0

தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அஜித் குமார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எப் 1 ரேஸராகவும் புகழ் பெற்றவர்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படமான ‘வலிமை’ வெளியாகி நான்கு நாட்களில், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61-வது படத்தின் பணிகளும் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக அஜித் 25 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களால் குட்டி தல என்று அழைக்கப்படும், அஜித்தின் மகனான ‘ஆத்விக்’ பிறந்தநாளை முன்னிட்டு அஜித் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் கடுக்கன், தாடியுடன் உள்ள அஜித்துடன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் குமார், மகள் அனுஷ்கா குமார் உள்ளிட்டோர் உள்ளனர். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here