புதிய திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணையும் ஓவியா!

0

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஓவியா முதன்முதலாக யோகிபாபு உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

’களவாணி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஓவியா அதன் பின் முத்துக்கு முத்தாக, மூடர் கூடம், மதயானை கூட்டம், காஞ்சனா 3 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’ராஜபீமா’ மற்றும் ’சம்பவம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ஆதரவு கிடைத்ததோடு, முதன்முதலாக ஓவியாவுக்காக டுவிட்டரில் ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஓவியா தற்போது யோகி பாபு உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. செப்டம்பர் 24-ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றே படப்பிடிப்பும் தொடங்கும் என்று கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here