புதிய சர்ச்சையில் சிக்கிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ

0

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) உடல் நலக்குறைவால் கடந்த 8 ஆம் திகதி மரணமடைந்தார்.

அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

இந்நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்டீன் ட்ரூடோ லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதனால் ஜஸ்டீன் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

கனடா நாட்டினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜஸ்டீன் ட்ரூடோவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் இவ்வாறு பிரதமர் நடந்து கொண்டது ஒரு அவமானம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சிலர் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டதாகவும் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here