புதிய கொவிட் திரிபுகள்…. விலங்குகளிடமிருந்து உருவாகும் அபாயம்

0

அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், நாய்கள், பூனைகள், எலிகள் மற்றும் வெள்ளெலிகள் போன்ற விலங்குகளுக்கு, மனிதர்களிடமிருந்து கொவிட் தொற்று பரவியது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்று உறுதியாகும் மேற்படி விலங்குகளிடமிருந்து புதிய கொவிட் திரிபுகள் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸின் பரவல் வரம்பு அதிக அளவில் இருப்பது இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல விலங்குகள் மனிதர்களிடமிருந்து மற்ற உயிரினங்களுக்கும் வைரஸை பரப்பும் திறன் கொண்டவை என தெரியவந்துள்ளது.

அனைத்து வகையான கொவிட் வைரஸ் திரிபுகளும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும்.

மேலும் பூனையிலிருந்து மனிதனுக்கு கொவிட் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here