புதிய கொரோனா மாறுபாடு Deltacron… விஞ்ஞானிகள் தகவல்

0

சைப்ரஸ் நாட்டில் விஞ்ஞானிகள் டெல்டா மற்றும் ஓமிக்ரான் மாறுபாடுகள் கொண்ட அறிகுறிகளுடன் 25 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த புதிய மாறுபாடானது டெல்டா வகையின் மரபணு பின்னணியை ஒத்தாக காணப்படுகின்றது.

ஒமைக்ரானின் சில திரிபுகளையும் கொண்டுள்ளது என சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் பேராசிரியர் Leonidos Kostrikis தெரிவித்துள்ளார்.

இதுவரை 25 நோயாளிகளில் புதிய Deltacron மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்களில் 11 பேர் ஏற்கனவே கொரோனா நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகும்.

கடந்த மாதம், மாடர்னாவின் தலைவர் ஒரு கலப்பின கொரோனா மாறுபாடு தொடர்பில் எச்சரித்திருந்தார்.

இது போன்று இன்னொரு புதிய மாறுபாடு உருவாகும் என்றே மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here