புதிய உலக சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

0

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இன்றைய நவீன கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்களில் மிக முக்கியமானவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தில் இரு பாட்ஷாக்களில் ஒருவர். அதாவது மெஸ்ஸி vs ரொனால்டோ.

ரொனால்டோ சமீபத்தில் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தது பெரும் பேசுப்பொருளானது. அவரை பற்றி ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

2003 ஆம் ஆண்டு முதல் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ, 2009ம் ஆண்டு வரை அதில் விளையாடினார். பின்னர்

கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து கிளப்பில் இணைந்தார் ரொனால்டோ. அதன் பின்னர் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப்,

ஜூவண்டஸ் அணிகளுக்காக பங்குபெற்ற ரொனால்டோ சமீபத்தில் தான் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

இதுகுறித்த பேச்சுக்களே இன்னும் ஓயாத நிலையில், தற்போது புதிய சாதனை மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ரொனால்டோ. உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் நேற்று போர்ச்சுகல் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு கோல்களை அடித்த ரொனால்டோ, உலகளவில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அல் டாய், 109 சர்வதேச கோல்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. ஆனால் நேற்று இந்த சாதனையை ரொனால்டோ முறியடித்தார். அவர் நேற்று இறுதி சில நிமிடங்களில் அடித்த 2 கோல்கள் தான் அவருக்கு 110 மற்றும் 111-ஆவது கோல்களாக அமைந்தன. ரொனால்டோ இதுவரை அடித்த கோல்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலானவை கடைசி 30 நிமிடங்களில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here