புதிதாக வாங்கிய வீட்டின் படுக்கையறையை பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள அந்த வீட்டை ஒரு பெண் கொள்வனவு செய்திருந்தார்.

இவ்வாறு புதிதாக வாங்கிய வீட்டின் படுக்கையறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதைக் கண்டு அதை திறந்து பார்த்த பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

குறித்த வீடானது 1951ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

எஸ்டேட் மேலாளரான Jennifer Little, அந்த படுக்கையறையில் ஏன் சாக்கடை மூடி இருக்கிறது என்று எண்ணி, நண்பர் ஒருவரைக் கொண்டு அதை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது, அது சாக்கடை அல்ல, அது ஒரு பதுங்கு குழி என்பது தெரியவந்தது.

அதாவது, அந்த காலகட்டத்தில் கலிபோர்னியாவிலுள்ள மக்கள், அணுகுண்டு வெடித்தால் தப்புவதற்காக இப்படி பதுங்கு குழிகளை வீடுகளுக்குள் உருவாக்குவது சாதாரணமான ஒரு விடயமாககும்.

அந்த பதுங்கு குழிக்குள், இரண்டு பேர் படுப்பதற்கான வசதியும், சிறுநீர் கழிக்க வசதியும் காணப்பட்டுள்ளது.

மேலும் சமூக ஊடகம் ஒன்றில் Jennifer அந்த பதுங்கு குழி குறித்த விவரங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here