புதர்களுக்கு இடையே காணப்பட்ட பெண்ணின் சடலம்…! லண்டனில் பயங்கர சம்பவம்

0

லண்டனில் ரோம்ஃபோர்ட், எசெக்ஸ் பகுதியில் புதர்களுக்கு இடையே பெண்ணின் சடலம் ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தில், கொல்லப்பட்டவர் 45 வயதான மரியா ஜேன் ராவ்லிங்ஸ் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து ஏ12 நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மர்மமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டும், தலையில் பலமாக தாக்கியும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள பொலிசார், அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களிடம் கண்காணிப்பு கெமரா காட்சிகள் சிக்கியிருந்தால் பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மரியாவின் குடும்பம் இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண் பிள்ளைகளின் தாயாரான மரியா செல்ம்ஸ்ஃபோர்ட் பகுதியில் வசித்து வந்தார்.

உடற்கூராய்வில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகவும், தலையில் பலமாக தாக்கியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் பொலிசாரால் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here