புகையிரதத்தில் மோதிய முச்சக்கர வண்டி… சாரதிக்கு நேர்ந்த கதி

0

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து சம்பவம் இன்று 12 ஆம் திகதி காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் காரணமாக சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here