வடகொரியா 2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில், வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது.
இந்நிலையில் தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தென்கொரிய இராணுவம் தெரிவிக்கையில்,
எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது.
இது சில மணி நேரங்கள் நீடித்தது என்று தெரிவித்தது.
வடகொரியாவின் எல்லையில் இருந்து சுமார் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் நகர் பகுதிக்கு அருகே பீரங்கி குண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.