பீப்பாய்க்குள் சடலமாக கிடந்த ஓரினச்சேர்க்கையாளர்! கனடாவில் அதிர்ச்சி சம்பவம்

0

கனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்தவர் LGBTQ சமூக உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

Bradfordல் கடந்த மாதம் Mojtaba Shabani என்பவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

37 வயதான Mojtaba ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

LGBTQ சமூக உறுப்பினரான Mojtaba குறித்த தகவல்களை அவர் சார்ந்திருந்திருக்கும் LGBTQ உறுப்பினர்கள் முன்வந்து தெரிவிக்க பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

Mojtaba-ன் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்த பின்னர் அது கொலை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

பொலிஸார் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற தகவல்களை வெளியிடவில்லை.

Mojtaba Durham Region, Simcoe கவுண்டி போன்ற ஒன்றாறியோவின் சில முக்கிய பகுதியில் தங்கியிருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார் பொதுமக்களுக்கு அவர் தொடர்பில் எதாவது தகவல்கள் தெரிந்தாலும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily  Tamil News, Sri Lankan News | Indian and World News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here