பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், மொஸ்கோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படவிருந்த பி.சி.ஆர் பரிசோதனையை புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அவரின் ரஷ்ய விஜயம் அமைந்திருந்தது.
தமது உயிரியல் மாதிரிகளை ரஷ்யா பெற்றுக்கொள்ளலாம் என்ற அச்சத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி பி.சி.ஆர் பரிசோதனையைப் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத காரணத்தினால், ப்ரான்ஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள், கைலாகு கொடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, நீள்வட்ட மேசையின் இரு முனைகளிலும் இருந்தவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த இரு தலைவர்களும், 4 மீற்றர் இடைவெளியில் இருந்தவாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.